இடு ஒரு பலகார வகை...
இதற்கு ஒவ்வெருத்தரும் ஒவ்வொரு பெயர் வைத்திருக்கலாம்...ஆனால் நம்மூரில் அதுக்குத்தான் பயிற்றம் பலகாரம் என்று சொல்கிறார்கள் ( என்று நினைக்கிறேன்.)
இது பண்டிகை தினங்களுக்காகத்தான் கூடுதலாக செய்கிறார்கள்.இது நாள் வரை விரும்பி சாப்பிட்டுமட்டும்தான் இருக்கிறேன்.செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கூட பார்த்தில்லை...
ஆனால்...
இந்த முறை பெருநாளைக்கு ஏதாவது ஸ்பெஷலா செய்ய வேண்டுமென்று (பெரிய இடத்தில் இருந்து) ஓடர்...தட்டிக்கழிக்க வாய்ப்பே இல்லை...
( காரணம்...3 வேளை சாப்பாடும் மெஸ் இலிருந்து வரவழைக்கப்படுகிறது..யாருக்கும் வயித்தெர்ச்சல் கூடாது ஓக்கே.)
ஒருமாதிரியா மாமியாருக்கு ஃபோன் போட்டு செய்முறை கேட்டு ரிஸ்க் எடுத்து செஞ்சது....
தேவை...
- பயறு
- பச்சரிசி
- சீனி
- கோதுமை மா
- ஏலம்
பயறு பச்சரிசி இரண்டையும் சம அளவுகளாக எடுத்துக்கொள்ளவும்.பயறை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
பின்
அதனை மிக்சியில் நன்கு அரைத்துக்கொள்ளவும்...
பின்பு சீனியை பாத்திரமொன்றில் இட்டு பாகு காய்க்கவும்..கெட்டியாகவிடக்கூடாது...
இது ரொம்ப ரொம்ப முக்கியம்.
காய்த்தெடுத்த பாகுவை அரைத்தெடுத்த களவையில் கொஞ்சம் கொஞ்சம் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
அதனைத்தட்டி டயமண்ட் வடிவத்தில் வெட்டிக்கொள்ள வேண்டும்.
கோதுமை மாவிற்கு மஞ்சள் உப்பு சிறிது விட்டு நீர் ஊற்றிக் கரைசலொன்னு தயார்த்துக்கொள்ள வேண்டும்.மிகவும் இருக்கமாகவும் மிகவும் தளர்வாகவுமின்றி இருத்தல் வேண்டும்.
வெட்டிய துண்டங்களை கரைத்தெடுத்த மாவில் விட்டு எடுத்து எண்ணெய் சூடானதும் இளம் நெறுப்பில் பொன் நிரம் ஆகுாம் வரை பொறிக்கவும்..
பின்
பறிமாறவும்

பி.கு ( உண்மையில் சுவையாக இருந்தது குறிப்பிடத்தக்கது....)
இலங்கையிலிருந்து கொண்டுவந்ததா என்று சிலர் கேட்கையில்...மனசுக்கு ரெக்கை முளைச்சிடுச்சி)
4 கருத்துகள்:
///ஆனால் நம்மூரில் அதுக்குத்தான் பயிற்றம் பலகாரம் என்று சொல்கிறார்கள் ( என்று நினைக்கிறேன்.)///
நாம ச்சின்ன வயசுல பைத்திய பனியாரம்`னு சொல்லுவோம்.
நல்ல பகிர்வு. நானும் இது வரை சாப்பிட்டு இருக்கிறேன். இன்றுதான் அறிந்து கொண்டேன்.
ஐடியா மணி`னு ஒரு ப்லாக்கில் என் கருத்து “புடிச்சிருக்கு”னு சொல்லி இருந்தீர்கள். நன்றி
பயற்றம் பலகாரத்திற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர் சொல்லுவாங்க...
ஆனால்...
அதை எப்படி... இப்படி பப்லிக்ல டைப் பன்றதென்று யோசிச்சு...யோசிச்சு...
தேடித்தான் இதைப் போட்டேன்...
அதுக்குள்ள பெநாளும் முடிஞ்சிருச்சேன்னுதான் கவலை...
சீனி அழவு என்ன ? அதற்கு எவ்வளவு தண்ணீர் விட வேண்டும்? என்ன பதத்துக்கு காய்ச்ச வேண்டும்?
கருத்துரையிடுக