சரிவுகளெல்லாம் வெற்றிப்படிகளாகும்.... அவமானமெல்லாம் கைத்தடிகளாகும்... அனைத்துமே வழுக்களுக்கு ஊன்றுகோள்களாகும்......
திங்கள், 29 ஆகஸ்ட், 2011
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011
பற்களுடன் பிறந்த குழந்தை
பிரிட்டனில் நியூகேசில் பகுதியில் உள்ள வால்சன்ட் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு
கடந்த 2011.07.20 அன்று பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.குழந்தையின் .
பெயர் – சம்மர் வேலன்
இதில் என்ன அதிசயம் இருக்கிறது.
ஒன்றுமில்லைதான்.
ஆனால்…
பிறந்த குழந்தைக்கு பற்கள் முளைத்திருக்கின்றனவாம்.
.இது ஒரு வியக்கத்தக்க விடயம்தானே…
எங்கள் குழந்தைகளுக்கு பள் முளைக்க
எத்தனை மாதங்கள் எடுக்கின்றன என்பதும் தெரியும்தானே…
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011
இஃப்தார்
அறபு நாடுகளில் இடத்துக்கு இடம் கூடாரங்களை அமைத்து நோன்பு திரப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன
.அந்த அமைப்புகள் கூட்டாகவும்…தனிப்பட்ட முறையிலும் இயங்கி வருகின்றன.
அதற்காக செலவளிக்கின்ற பணத்தொயை...ஒருசில வறிய நாடுகளுக்காக அனுப்பயதாகவும் கூறப்படுகிறது்.
குறிப்பிட்ட சில இடங்களில் நோன்பு திறப்பதற்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.பெறும்பாலான இடங்களில்…இரவுச்சாப்பாடுகளும் உடனே வழங்கப்படுகின்றன.
இந்த இலவச ஏற்பாடுகளுக்கு முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனையோரும் வருகை தந்து பசியாற்றிக்கொள்கின்றனர்.
பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தியதிலிருருந்தும் செலவிடுங்கள்.கண்ணை மூடிக்கொண்டே தவிர எதை வாங்கிக்கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்.அல்லாஹ் தேவையற்றவன்.புகளுக்குறியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள் (2:267).
புதன், 10 ஆகஸ்ட், 2011
இஃப்தார் நிகழ்வு
டோகா கட்டார்-
GARAFA ஸ்போட்ஸ் கிளப் இல் எதிர்வரும் பண்ணிரெண்டாம் திகதி 12.08.2011 அன்று இஃதார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவலொன்றைக் கிடைக்கப் பெற்றேன்.
கட்டார் வாழ் மக்களே..!!! .சந்தர்ப்பம் கிடைப்பவர்கள் வருகை தரலாமே....
தக்காளி ஸோஸ்
தேவை
தக்காளி………………………………………………………………1 kg
வினிகர்………………………………………………………………..அரை போத்தல்
மிளகாயடத் தூள்…………………………………….2 மேசைக்கரண்டி
இஞசி…………………………………………………………………….2 மே.க
பட்டை………………………………………………………………..அரை மே.க
சாதிக்காய்……………………………………………………….1/4 மே.க
சீனி………………………………………………………………………….250g
மிளகு………………………………………………………………………1 தே.க
Sodium bensoit………………………………………………….சிறிது
(நீண்ட காலப் பாவனைக்கு)
செய்முறை
தக்காளியை நன்றாகக் கழுவி கொதி நீரல் நன்கு அவிக்கவும்.
அவித்த பின் தேலை உறித்துக் கொள்ளவும்.
தோல் நீக்கிய தக்காளியை மசித்து பீட் பண்ணிக் கொள்ளவும்.
அந்த தக்காளிச்சாற்றுடன் லே கூறிய பெருட்களை சேர்த்து அடுப்பில் வைத்து நீர் வற்றியபின் இறக்கவும்.
பிஸ்கட் புடிங்
தேவை
ஐசிங் சுகர்……………………………………………250g
சொக்லட் பௌடர்……………………….20g
பிஸ்கட்…………………………………………………….500g
பட்டர்………………………………………………………….125g
முந்திரிப் பருப்பு…………………………….சிறிது
உலர் திராட்சை……………………………..சிறிது
பால்……………………………………………………………….கப்
வெனிலா……………………………………………………………
செய்முறை
ஐசிங் சுகர், சொக்லட் பௌடர் ,பட்டர் , வெனிலா சேர்த்து நன்றாக பீட் பண்ணி ஐசிங் க்ரீம் ஒன்றை தயார் செய்து கொள்ளவும்பின் ஒரு தட்டில் பட்டர் சிறிது தடவி அதில் பிஸ்கட் ஒவ்வொன்றாக எடுத்து பரப்ப வேண்டும்.
பின் அந்த பிஸ்கட்டின் மீது ஐசிங் க்ரீமை நன்கு பூசிக்கொள்ள வேண்டும்.
மீண்டும் அதற்கு மேல் பாலில் ஊறவைத்த பிஸ்கட்டுகளை அடுக்கவும்.மீண்டும் அந்த ஐசிங்கை பிஸ்கட் மீது தடவி முந்திரி உலர் திராட்சைகளை தூவிக்கொள்ளவும்.
தேவை
ஐசிங் சுகர்……………………………………………250g
சொக்லட் பௌடர்……………………….20g
பிஸ்கட்…………………………………………………….500g
பட்டர்………………………………………………………….125g
முந்திரிப் பருப்பு…………………………….சிறிது
உலர் திராட்சை……………………………..சிறிது
பால்……………………………………………………………….கப்
வெனிலா……………………………………………………………
செய்முறை
ஐசிங் சுகர், சொக்லட் பௌடர் ,பட்டர் , வெனிலா சேர்த்து நன்றாக பீட் பண்ணி ஐசிங் க்ரீம் ஒன்றை தயார் செய்து கொள்ளவும்பின் ஒரு தட்டில் பட்டர் சிறிது தடவி அதில் பிஸ்கட் ஒவ்வொன்றாக எடுத்து பரப்ப வேண்டும்.
பின் அந்த பிஸ்கட்டின் மீது ஐசிங் க்ரீமை நன்கு பூசிக்கொள்ள வேண்டும்.
மீண்டும் அதற்கு மேல் பாலில் ஊறவைத்த பிஸ்கட்டுகளை அடுக்கவும்.மீண்டும் அந்த ஐசிங்கை பிஸ்கட் மீது தடவி முந்திரி உலர் திராட்சைகளை தூவிக்கொள்ளவும்.
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011
நோன்புக்கஞ்சி
நோன்புக்கஞ்சி...அதுவும் பள்ளிக்கஞ்சி என்றால் சுவையை கேட்கவும் வேண்டுமா.?இந்த வருடம் எனக்கு பள்ளிக்கஞ்சி குடிப்பதற்கான வாய்ப்புக்கிட்டவே இல்லை.அதை நினைத்தால் கொஞ்சம் கவலையாகத்தானிருக்கிறது.என்ன பண்ண முடியும் இந்தக் கவலையைத்தீர்க்க ...
இது ஊர்க் கஞ்சி அல்ல .நான் செய்த டோகா கஞ்சி...
நீங்களும் செஞ்சி பாருங்கள்.
தேவை...
அரிசி
துண்டாக நறுக்கிய இறைச்சி
வெங்காயம்
இஞ்சி பூண்டு விழுது
கறிவேப்பிவை
ஏலம்
பட்டை
வெந்தயம்
எண்ணெய்
கராம்பு
பச்சை மிளகாய்
தக்காளி
கரட்
தேங்காய்ப் பால்
தேவையான பதாரத்தங்களின் அளவு என்பது...மாறுபடலாம்.நம்மை வறுத்திக்கொணடு சட்டப்படி செய்ய வேண்டும் என்கிற கட்டாயத் தேவை இல்லை.வீட்டில் உள்ளவற்றைக் கொண்டு எட்ஜஸ் பண்ணிக்கொள்ளலாம்.
செய்முறை...
பாத்திரமொன்றை கழுவி சுத்தம் செய்து அடுப்பில் வைக்கவும்.
.இளம் நெருப்பாக இருக்கட்டும்.பாத்திரம் நன்கு சூடானதும் இஞ்சி பூண்டு விழுது. தக்காளி.கறிவேப்பிலை. ஏலம்.படடை நறுக்கிய வெங்காயம்.கரட் பச்சை மிளகாய்.வெந்தயம் இட்டு தாளிக்கவும்
.பின் நறுக்கிய இறைச்சித்துண்டுகளை இடவும்.அது கொஞ்சம் வதங்கியதும்.கழுவிய அரிசை இடவும்.
அதற்கு சிறிது சீரகத்தூள். மஞ்சள் தூள் .மிளகுத் தூள் உப்பு . இட்டு நனறாக நீர் ஊற்றி வேகவிடவும்.
நன்றாக வெந்ததும் நன்றாக்கடைந்து கொள்ளவும்.
பின் பாலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.
சரியான பதம் வந்ததும் இறக்கி ஆரவிடவும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

















