இறைச்சி....
கடையில் வாங்கி கமைப்பது
பெரியவிடயமே இல்லைங்க......
இன்று சமைத்துவிட்டு மீதமாக உள்ள
கறியை என்ன பண்ணுவீங்க..????
விலைவாசிவேறு கழுத்தறுக்குது...
குளிரூட்டியல் வைத்து
நாளை பயன்படுத்தலாம்....இல்லையா???
ஆனால்...
நேற்றும் இதே கறின்னு அழுப்பு வருமா இல்லையா?????
வரும்.
அப்போ இப்படி செய்து பாருங்க...
இறைச்சித் துண்டுகளை எடுத்து
சுடு நீரில் நன்கு கழுவிக்கொள்ளுங்க....
பிறகு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்
வெங்காயம்
தக்காளி
(இல்லை என்றாலும் பரவாயில்லை)
பச்சை மிளகாய்...
இவற்றை நீளவாகில் நறுக்கிக் கொள்ளுங்கள்
பின் ஒரு வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு சூடானதும் வெட்டிக்கொண்ட இறைச்சித்துண்டு கறிவேப்பிலை சிறிது விட்டு எண்ணையில் பொறித்துக்கொள்ளுங்கள்...
பிறகு அதற்கே நறுக்கிய வெங்காயம்...
பச்சைமிளகாய் உப்பு சிறிது மஞ்சள்...
ஏலம் 2 அல்லது 3 இட்டு வதங்க விடுங்கள்.....
சிறிது நேரம் விட்டு
தக்காளி போடுவதாயின் போட்டுக்கொள்ளுங்கள்
மிதமான கூட்டில் வைக்கவும்...
அடிக்கடி கிளரிக்கொள்ளுங்கள்
வெந்ததும்...
துண்டு மிளகாய் சிறிது விட்டு கிளரிக்கொள்ளுங்கள்...
பின் இறக்கிக்கொள்ளுங்க..
சாப்பிடுவதற்கு தயாராக இருக்கும் பாருங்க.......